அடேங்கப்பா.. 1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட், 23 கோடி ரூபாய் ரொக்கம்.. கலெக்ஷனை அள்ளிய பிரபல கோயில்!
1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட், 23 கோடி ரூபாய்க்கு மேல் பணம், வெள்ளி கைத்துப்பாக்கி மற்றும் வெள்ளி கைவிலங்குகள் - ராஜஸ்தானின் சித்தோர்கரில் உள்ள சன்வாலியா சேத் கிருஷ்ணர் கோயிலில் வரலாறு காணாத நன்கொடைகள் குவிந்தன. இந்த புகழ்பெற்ற கோயிலில், அதன் சமீபத்திய கருவூல எண்ணிக்கையின் போது காணிக்கைகளின் மொத்த மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட் இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக கருதப்பட்டது. மேலும் 23 கோடி ரூபாய் ரொக்கம் பணமும் இருந்துள்ளது. பக்தர்கள் சிறிய தங்க பிஸ்கட்கள், வெள்ளி கலைப்பொருட்கள் மற்றும் வெள்ளி கைத்துப்பாக்கி, தூய வெள்ளி பூட்டு மற்றும் சாவி மற்றும் புல்லாங்குழல் போன்ற தனித்துவமான பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

இந்த சமீபத்திய சேகரிப்பு கோவிலுக்கு பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நன்கொடை இதுவாகும் என கூறியுள்ளனர். இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில் கருவூலம், நன்கொடைகளின் எண்ணிக்கை பல கட்டங்களாக எண்ணப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
