அதிர்ச்சி... நடுரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு!

 
செல்போன் பறிப்பு

தமிழகம் முழுவதுமே வன்முறை சம்பவங்கள், கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சூசை பாண்டியபுரம், அந்தோணி ராஜ் மகன் ராஜேஷ் பீட்டர் (32), தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து சூசை பாண்டியாபுரம் விலக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்று விட்டனர். 

தூத்துக்குடி

இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ராஜேஷ் பீட்டர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் பேச்சிராஜா (24) என்பவரை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!