ஐபிஎல் கொண்டாட்டம்... சென்னையில் நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேர்வை நீட்டிப்பு!

 
மெட்ரோ

இன்று சென்னையில் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் ரசிகர்களின் வசதிக்காக நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


 

இது தொடர்பாக மெட்ரோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 11 மணிக்கு மேல் நாளை 23ம் தேதி அதிகாலை 01:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பதை CMRL தெரிவித்துக் கொள்கிறது. 

மெட்ரோ ரயில்

2024 சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி முடிந்து பத்திரமாக வீடு திரும்ப வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்துக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வசதிகளை வழங்க CMRL விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web