ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

 
வங்கக்கடல் அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

இந்தியப் பெருங்கடலின் இரு முக்கியக் கடல் பகுதிகளான வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  கனமழை மழை

அக்டோபர் நான்காவது வாரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய இரு பகுதிகளிலுமே வளிமண்டலக் காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்தச் சுழற்சிகள் அடுத்தடுத்துத் தீவிரமடைந்து, ஒரே காலகட்டத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளாக (Low Pressure Area) வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை ஏற்கனவே தொடங்கியுள்ள சூழலில், இரு கடல் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த வளிமண்டல மாற்றங்கள் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழைப்பொழிவை மேலும் தீவிரப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் கவனமும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.