கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து.. ஒருவர் பலி.. பலர் படுகாயம்!

 
வத்தலக்குண்டு விபத்து

திண்டுக்கல் மாவட்டம், மதுரை-கொடைக்கானல், பெரியகுளம் மற்றும் திண்டுக்கல்-கொடைக்கானல், தேனி குமுளி போன்ற முக்கிய சாலைகள் சந்திக்கும் இடமாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் வத்தலக்குண்டு சாலை. இப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தெப்பத்துப்பட்டி செல்லும் அரசு மாநகர பேருந்து தறிகெட்டு சென்ற சாலையோரத்தில் இருந்த பலரை மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் திருச்சியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேபோல், சாலையோரம் நடந்து சென்ற அழகாபுரியைச் சேர்ந்த பாண்டியம்மாள், வயது 62, என்ற மற்றொரு மூதாட்டியும், பஸ் மோதியதில், கால் நசுங்கி, ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில், பழுதடைந்த அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் ஷேக் அப்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த பாண்டியம்மாள் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!