குடிபோதையில் தகராறு.. ஆத்திரத்தில் நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற சக நண்பன்!
குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நண்பர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, பூபதி நகர் பகுதியைச் சேர்ந்த ரவி, சரசு தம்பதியின் மூத்த மகன் ஸ்ரீதர் (25), ஆற்காட்டில் உள்ள மிக்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ஆற்காடு ஒத்தவாடை தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ஸ்ரீதர் (28) என்பவர் இவரது நண்பராக இருந்துள்ளார். இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில், பூபதி நகரில் உள்ள ஸ்ரீதர் வீட்டின் மேல் தளத்தில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் திடீரென ஆத்திரமடைந்த ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பூபதி நகர் ஸ்ரீதரை கத்தியால் குத்தி கொன்றதாக கூறி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதையடுத்து ஆற்காடு நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் இறந்த ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
