திடீரென மாயமான தங்க நகைகள்.. முதலாளி வீட்டிலேயே கைவரிசை காட்டிய பணிப்பெண்!
அண்ணாநகர் கிரசன்ட் சாலை ஷெனாய் நகரில் வசிப்பவர் நீரஜா (31). இவர் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 22ம் தேதி தனது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை சோதனை செய்தார். அப்போது, தங்க நகைகள் சில காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீரஜா தங்க நகைகள் காணாமல் போனது குறித்து அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நீரஜாவின் வீட்டின் பீரோ லாக்கர் உடைக்கப்படாத நிலையில் நகைகள் மாயமானது எப்படி, அவரது வீட்டிற்கு யார் வந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், நீரஜா வீட்டில் வேலை பார்த்து வந்த பவானி (எ) லட்சுமி பவானி (30) மீது சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், நீரஜா வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதையும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகைகளை திருடிச் சென்றதையும் பவானி ஒப்புக்கொண்டார். விசாரணையில், திருடிய நகையை கணவர் துர்கா பிரசாத் (38) தன்னிடம் கொடுத்ததும், நகையை அடகு வைத்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 13.700 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பவானியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். இதையடுத்து போலீசார் நேற்று இரவு துர்கா பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
