பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சி.. பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ஆம் வகுப்பு மாணவர்!

 
சக்சேனா

மத்தியப் பிரதேசத்தின் சத்தரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனும் ஒரு கூட்டாளியும்  ஸ்கூட்டரில் தப்பிச் சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மதியம் 1.30 மணியளவில் பள்ளியின் கழிவறை நுழைவாயிலில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அகம் ஜெயின் தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரது கூட்டாளியும் அதே பள்ளியின் மாணவரும், இறந்தவரின் ஸ்கூட்டரில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக ஜெயின் கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக தாமோரா அரசு மேல்நிலைப் பள்ளியின்  ​​முதல்வராக இருந்த எஸ்.கே.சக்சேனா (55) சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது என்று மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.பி.பிரஜாபதி தெரிவித்தார்.

சக்சேனாவின் தலையில் சுடப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பள்ளி முதல்வர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் இருந்து குற்றவாளியை நவ்கான் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து எஸ்பி கூறுகையில், ’இரண்டு மாணவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மாணவன் ஓர்ச்சா ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார், அங்கு அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன’ என தெரிவித்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!