பெண் குளிப்பதை வீடியோ எடுத்த அண்ணன் தம்பி.. அதிர்ச்சியில் உறைந்த அரசு ஊழியர்..!!

 
குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

அரசு பெண் ஊழியர் குளிப்பதை வீடியோ எடுத்த அண்ணன் தம்பியை போலீசார் கைது செய்தனர்.

இரணியல் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். 

Two Youth arrested for taking video of women bathing tvk

உடனே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்தனர். இதுதொடர்பாக பெண் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அதே பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பிகளான செல்லத்துரை (33), சின்னத்துரை (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து செல்லத்துரை, சின்னத்துரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web