ஹைதராபாத் JNTU வளாகத்தில் மாணவர்கள் இடையே கடும் மோதல்: 10 பேர் கைது!
ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் 'தீஜ்' பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, மாணவி ஒருவர் குறித்துத் தவறாகப் பேசிய விவகாரத்தில் இரு வேறு விடுதி மாணவர்களிடையே திடீர் மோதல் வெடித்தது. இந்த விவகாரம் முற்றிய நிலையில், மாணவர்கள் குச்சிகளுடன் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவின.
தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், வன்முறையில் ஈடுபட்ட 10 மாணவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளாகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
