மருத்துவமனை தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு... தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு வார்டில் நேற்று இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத்துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 12 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜான்சி மாவட்ட காவல்துறை ஆணையருக்கும், துணை கண்காணிப்பாளருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!