10 அடி ஆழத்திற்கு தானே உருவான பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி..! எங்கு தெரியுமா..?

தி.நகரில்  திடீரென பெரிய பள்ளம் ஒன்று உருவாகி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
பள்ளம் விழுந்த புகைப்படம்

சென்னை தி.நகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது இதை சீரமைக்கும் பணிகளில் குடிநீர்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள நாயர் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அளவில் 10 அடி ஆழம் ,3 அடி அகலத்தில் பெரிய பெள்ளம் ஏற்பட்டது. இதைபார்த்த காவல்துறையினர் உடனடியாக பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் மேலும் அந்த சாலையை ஒரு வழி சாலையாக மாற்றி இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர்.அதிகாலையில் ஏற்பட்ட பள்ளம் என்பதால் விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சாலையில் வழக்கமாக சென்று வரும் தடம் எண் 12 x மற்றும் 11 உள்ளிட்ட பேருந்துகளை வடக்கு போக் சாலை வழியாக திருப்பி விட்டனர்.இதனை தொடர்ந்து குடிநீர்வாரிய அதிகார்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளத்தை முழுமையாக தோண்டி ஆய்வு செய்த பிறகு தான் எதனால் பள்ளம் ஏற்பட்டது என்ற காரணம் தெளிவாக தெரியும் என குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.கழிவுநீர் குழாயா அல்லது குடிநீர் குழாயா எதனால் இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து பள்ளத்தை சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

From around the web