பேரதிர்ச்சி... 10 மாத பெண்குழந்தை பலாத்காரம்... குஜராத்தில் கொடூரம்!

 
குழந்தை பலாத்காரம்
 

கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், குஜராத் மாநிலத்தில் 10 மாத பெண்குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் பனோலி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார் (30). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான குடும்பத்தினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் வாசலில் இருந்த  10 மாத பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்ற தீபக் குமார், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு குஷால் ஓசா கூறினார்.

குழந்தை பலாத்காரம்

குழந்தையின் குடும்பத்தினருக்கும் தீபக் குமார் ஏற்கெனவே நன்கு அறிமுகமான நிலையில், பல முறை அவர்களின் வீட்டிற்கு குழந்தையுடன் விளையாடுவதற்காக தீபக் குமார் வந்து சென்றுள்ளதாகவும் குழந்தையின் உறவினர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வந்திருந்த தீபக் குமார், வீட்டின் முற்றத்தில் இருந்த குழந்தையை வீட்டிற்கு தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அருகிலேயே தீபக் குமார் வீடும் இருந்த நிலையில், குழந்தையைத் தூக்கி சென்று நேரமானதாலும், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதாலும் குழந்தையின் பாட்டி, தீபக் குமாரின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிவதையும், குழந்தை பலத்த காயம் அடைந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள், தீபக் குமாரைப் அடித்து, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குழந்தையின் தாய் செய்தி கேள்விப்பட்டு பதறியடித்தபடி ஓடிச் சென்று, குழந்தையை மீட்டு அருகில் உள்ள பாரூச் சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். 

உத்தரபிரதேச போலீஸ்

தற்போது பலத்த காயங்களுடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீபக் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், 10 மாத குழந்தையை கூட விட்டு வைக்காத காமூகர்கள் குறித்து கிராம மக்கள் கொந்தளித்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் எளிதில் நம்பி, பெண் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web