தமிழக அரசு விரைவு பேருந்து கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி! அமைச்சர் அறிவிப்பு!

 
தமிழக  அரசின்  விரைவுப் பேருந்து

தனியார் சொகுசு பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவெடுத்து வருவது பொதுமக்களை குஷிபடுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது தமிழக அரசின் விரைவுப் பேருந்தில் இருவழிப் பயணச்சீட்டை இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்தால், பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனியார் பேருந்துகளில் ஹைடெக்காக பல அதிகபடியான வசதிகளோடு தொலைதூர பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்த சேவைகள் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்களை மனதில் வைத்து துவங்கப்பட்டது. ஆனால் இவற்றில் கட்டண கொள்ளை இருந்து வருகிறது. முறையான டிக்கெட் கட்டணம் கிடையாது என்கிற புகார் ஒவ்வொரு விடுமுறை தினங்களில் வந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 1,082 பேருந்துகள் இயங்கி வருகின்றன.

அவை, அதிநவீன மிதவைப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்து என தற்போது இயங்கி வருகின்றன. இவை தமிழ்நாட்டை அடுத்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் 251 வழித்தடங்களில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இணையதள சேவையின் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் மூலமாக பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தொலை தூரங்களுக்கு பயணப்பட விரும்பினால் அதை ஊக்குவிப்பதற்கும், விழா நாட்களில் பயணிப்பதற்கும் உதவுமாறு இந்த இணையதளத்தில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் மூலமாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தற்போது அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் துவங்க உள்ளதால் இதனை ஏராலமானோர் வரவேற்றனர். ஆனால் அவர்களுக்கு பெரும் இடையாய் இந்த  ஆஃபர் விழா நாட்களில் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளதோடு அரசு இந்த சலுகைகளை விழா நாட்களிலும் வழக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web