தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 உயர் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

 
ஐபிஎஸ் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறை நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்யும் வகையில், 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 10 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிபிசிஐடி டிஜிபி  பி. பாலநாகா தேவி ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி : வித்யா ஜெயந்த் குல்கர்னி ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் கிரைம் ஏடிஜிபி : அபின் தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கியூ பிரிவு எஸ்பி : ராம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்பிசிஐடி எஸ்பி: அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகர் துணை ஆணையர்: அர்பிதா ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் இடமாற்றம் SI எஸ்.ஐ. எஸ்ஐ

பிற முக்கியப் பொறுப்புகள் மற்றும் எஸ்பிக்கள் நியமனம்

கமாண்டோ படை எஸ்பி: ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் கடலோரப் பாதுகாப்பு குழும எஸ்பி: செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எஸ்பி: சரவணக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி தலைமையிட துணை ஆணையர் : ரமேஷ்பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறைப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தவும் இந்த அதிரடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.