அதிர்ச்சி... 10 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் செலக்கரையில் நேற்றிரவு 10 வயது பள்ளி மாணவன், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூரில் வசித்து வரும் தம்பதியர் சியாத்-ஷாஜிதா. இவர்களது மகன் அசிம் சியாத்(10). வீட்டில் அசிம் தூக்கில் தொங்கிய காட்சியை பார்த்த குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு அசிம்மை மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அசிம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சேலக்கரை எஸ்எம்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அசிம் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேலக்கரை போலீசார் அசிம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
