சூப்பர்... ஏப்ரல் 1 முதல் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஊதியம் உயர்வு!

 
100 நாள் வேலை

 இந்தியா முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் 2006ம் ஆண்டு   மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின் மூலம்  நாடுமுழுவதும் 6 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இனி இவர்களுக்கு 100 நாள் வேலை இல்லை – புதிய கட்டுப்பாடுகள்
இந்நிலையில் தற்போது இத்திட்டத்திற்கான தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும்  மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அதன்படி 3 முதல் 10 சதவீதம் வரை இந்த உயர்வு செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை  தினசரி ஊதியம் ரூ.294ஆக இருந்தநிலையில், ரூ. 319ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி இவர்களுக்கு 100 நாள் வேலை இல்லை – புதிய கட்டுப்பாடுகள்

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இந்நிலையில்  தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று மத்திய அரசு இந்த அரசாணையை வெளியிட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது.  இந்த அரசாணைப்படி புதிய ஊதிய உயர்வு ஏப்ரல் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web