இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலி! 300 பேர் படுகாயம்!

 
சோமாலியா வெடிகுண்டு

இரட்டைக் கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகள் அச்சமுடனும், அதிர்ச்சியுடனும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக தீவிரவாதம் தழைத்தோங்கி வருகிறது. இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு, சோமாளியாவில் ஆளும் அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது.

அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறி வைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.   இந்நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 கார் வெடிகுண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

Somalia

இதனை சோமாலியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஹசன் ஷேக் முகமது நேற்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிபடுத்தினார். இதற்கு முன்னர் தலைநகர் மொகாடிஷுவில் 2017-ல் நடந்த லாரி வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர். 

Somalia

அந்த சம்பவத்திற்கு பின் நடைபெறும் மிகக்கொடூர குண்டுவெடிப்பு சம்பவமாக இது அமைந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web