100 நாள் 125 நாட்களாக உயர்வு... புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அமல்... மாநில வாரியாக ஊதியம் பட்டியல் வெளியீடு!

 
100 நாள் வேலை

நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அமலில் இருந்த நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாக ‘வளர்ச்சியடைந்த பாரதம்-ஊரக வேலை மற்றும் வாழ்வாதார திட்டம்’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்கப்பட உள்ளது.

100

இந்த புதிய சட்டத்தின்படி கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான தினக்கூலி எந்தவொரு மாநிலத்திலும் முந்நூறு ரூபாய்க்குக் குறைவாக இருக்காது. உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஊதிய விகிதங்கள் 15  முதல் 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளன. கேரளம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நானூற்று ஒன்பது ரூபாய் வரையிலும், சிக்கிம் மாநிலத்தில் அதிகபட்சமாக நானூற்று ஐம்பது ரூபாய் வரையிலும் தினக்கூலி உயர்த்தப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் ஊரக

இந்தப் புதிய திட்டத்திற்காக 2026 - 27  நிதியாண்டில் 956 கோடியை மத்திய அரசு முழுமையாக ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 7957 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு புதிய கணக்கைத் தொடங்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.