1000கிலோ மீன், 200கி இறால் ! மருமகனுக்கு சீர் செய்த மாமனார்!

 
1000கிலோ மீன், 200கி இறால் ! மருமகனுக்கு சீர் செய்த மாமனார்!

ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு இன மக்கள் ஆஷாதம் மாத விழாவை ஜூன் , ஜூலை மாதங்களில் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

புதுமண தம்பதிகளுக்கு ஆடிமாதம் சீர் கொடுத்து கொண்டாடுவதும் தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

1000கிலோ மீன், 200கி இறால் ! மருமகனுக்கு சீர் செய்த மாமனார்!

இந்த விழாவில் ஏனாமை சேர்ந்த பவன் குமாருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான முறையில் சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.

1000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கோழி, 1000 கிலோ காய்கறி, 250 கிலோ மளிகை பொருட்கள், 250 கிலோ ஊறுகாய், 50 வகை இனிப்புகள் என வண்டி, வண்டியாக சீர்வரிசை அனுப்பி வைத்தார்.

1000கிலோ மீன், 200கி இறால் ! மருமகனுக்கு சீர் செய்த மாமனார்!

இதனை ஊர்வலமாக கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதுகுறித்து பலராமகிருஷ்ணா தெரிவிக்கையில் தனது மகள் பிரத்யுஷாவுக்கும், பவன்குமாருக்கும் ஜுன் 21ல் திருமணம் நடத்தப்பட்டது. தனது மகளை, மருமகன் நன்றாக கவனித்துக் கொள்வதால் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்ளும் வகையில் இந்த சீர்வரிசையை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

From around the web