தமிழகம் முழுவதும் 1105 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
பேருந்துகள்

வரும் வார  இறுதியில் புனித வெள்ளி மற்றும் வார விடுமுறையை ஒட்டி தமிழகம் முழுவதும் ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்து முனையத்தில் இருந்து 28-ம் தேதி 505 சிறப்புப் பேருந்துகளும், 29ம் தேதியன்று 300 பேருந்துகளும், 30ம் தேதியன்று 345 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

 

தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதல் பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆகவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

 

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 505 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28/03/2024, 29/03/2024 மற்றும் 30/03/2024 (வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 505 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web