ஒரே ஒரு போன் காலில் 10000 பேர் பணிநீக்கம்! கதரும் பைஜூஸ் ஊழியர்கள்!

 
பைஜுஸ்

பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் தனது ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

பணிநீக்கம்


பைஜூஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு நோட்டிஸ் பீரியட் கொடுக்காமல் சாதரணமாக போன் கால் மூலமாக வேலையை விட்டு நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.  `உங்கள் வேலை 2024 மார்ச் 31 உடன் நிறைவடைகிறது. சம்பளம் பின்னர் தறப்படும்` என்று போன் காலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இச்செயலுக்குக் கடுமையான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

ஐடி நிறுவனங்கள்

மேலும், இதன்மூலம் சுமார் 500 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம எனத் தகவல்கள் வெளியாகிள்ளன. இது குறித்து பைஜூஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், `வணிக கட்டமைப்பின் இறுதி கட்டத்தில் இருப்பதால் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் கடந்த 2023-ல் மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. சட்டச் சிக்கல்கள் காரணமாக, நிறுவனத்தில் அசாதாரணமான சூழ்நிலையை நாங்கள் சந்திக்கிறோம்.` என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பைஜூஸ் நிறுவனம் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web