10,000 வீடுகள் மூழ்கும் அபாயம்! கதறும் தூத்துக்குடி மக்கள்!!

 
10,000 வீடுகள் மூழ்கும் அபாயம்! கதறும் தூத்துக்குடி மக்கள்!!

தூத்துக்குடி மக்கள் இந்த மழைக்கு கதறுகின்றனர். சுமார் 10,000 வீடுகள் இந்த மழை நீரில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றது. கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக புங்கவர்த்தம் கண்மாய் நிரம்பி வெள்ள நீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் ஊரே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

10,000 வீடுகள் மூழ்கும் அபாயம்! கதறும் தூத்துக்குடி மக்கள்!!

வங்கக் கடலில் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று முதலே தமிழகத்தின் உட்புறப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

தூத்துக்குடியில் நேற்று அதிகாலை துவங்கிய கனமழை பிற்பகலில் அதிகன மழையாகவும், அதை தொடர்ந்து மிக அதிகனமழையாகவும் கொட்டித் தீர்த்தது. தூத்துக்குடியின் காயல்பட்டினத்தில் 306 மி.மீ மழை பெய்துள்ளது.

10,000 வீடுகள் மூழ்கும் அபாயம்! கதறும் தூத்துக்குடி மக்கள்!!

திருச்செந்தூர் பகுதியில் பெய்த கனமழையால் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் மழை நீர் சூழ்ந்தது. அம்மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் தங்களுடைய குடியிருப்புகள் மூழ்கிவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

From around the web