‘தமிழ்நாடு நாள்’ போட்டிகள் ... மாணவர்களுக்கு ரூ10000 பரிசு... பேச்சு, கட்டுரை போட்டி !

 
தமிழ்நாடு

தமிழக அரசு ஜூலை 18ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாளாக  கொண்டாடி வருகிறது. இந்த நாளில் தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினார். 2022ம் ஆண்டு முதல் இந்நாளினைத் தமிழக அரசு தமிழ்நாடு நாளாக பள்ளிகளில் கொண்டாடி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 'தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

மாணவிகள்

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குனர் தமிழகம் முழுவதும் ஜூலை 18ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3  பரிசுகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

மாணவிகள்
சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்துகொண்டு முதல் 3 இடங்களை பிடிக்கு மாணவ , மாணவிகளுக்கு ஜூலை 18ம் தேதி  தமிழ்நாடு நாள் விழாவில் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்ட போட்டியில் ஜூலை 9ம் தேதி சென்னை அண்ணா சாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ10000, 2ம் பரிசு ரூ7000 , 3ம் பரிசு ரூ5000 அத்துடன்  பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கான தலைப்புகள் : 


கட்டுரைப் போட்டி :
ஆட்சிமொழி தமிழ்


பேச்சுப்போட்டி : 


1.குமரி தந்தை மார்சல் நேசமணி 
2.தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா 
3.முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி

From around the web