கங்கை வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில்!
Sep 2, 2026, 14:00 IST
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் அமைந்திருந்த நூற்றாண்டைக் கடந்த துர்கா கோயில் ஆற்று நீரில் சரிந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கங்கை ஆற்றின் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததன் காரணமாக, 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில் இடிந்து ஆற்றுக்குள் சரிந்து அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கங்கை ஆற்றில் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அப்பகுதியில் வெள்ளத்தின் சீற்றமும் அதிகமாகக் காணப்படுகிறது. எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தவிர்க்கும் பொருட்டு, கங்கை கரையோரப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
