108 ஆம்புலன்சிலேயே பிரசவம்... ... தாயும் சேயும் நலம்... 58 வது முறையாக மருத்துவ உதவியாளர் ரோஷியின் சாதனை!

 
பிரசவம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலிருந்து மதுரைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு வழியிலேயே தீவிரப் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது உடனடியாகச் செயல்பட்ட மருத்துவ உதவியாளர் ரோஸி, ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாக மீட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ்

கர்ப்பிணியை மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது பிரசவ வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்சை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, மருத்துவ உதவியாளர் ரோஸி தேவையான முதலுதவி மற்றும் பிரசவ உதவிகளை மேற்கொண்டார். அவரது துரிதமான செயல்பாட்டால் ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும் சேயும் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை

மருத்துவ உதவியாளர் ரோஸி இதுவரை ஆம்புலன்சில் வெற்றிகரமாகக் கையாண்டுள்ள 58-வது பிரசவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவசர நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்த அவரது பணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.