10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

 
தேர்வு

10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு பின்னர் 2022-ம் ஆண்டுக்கான 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. 

2022-2023-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகளும் மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.

தேர்வு

இந்நிலையில்,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 

அதேபோல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

+2

மேலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19-ம் தேதி  முதல் தொடங்குகிறது .ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள்  நீட் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web