நாளை தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு!
நாளை மார்ச் 26ம் தேதி தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். நாளை தமிழ் உட்பட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
நாளை மார்ச் 26 - தமிழ் மற்றும் மொழிப்பாடங்கள்
மார்ச் 28- ஆங்கிலம்
ஏப்ரல் 1- கணக்கு
ஏப்ரல் 4- அறிவியல்
ஏப்ரல் 7- விருப்ப மொழி பாடம்
ஏப்ரல் 8- சமூக அறிவியல்
தேர்வு நாட்களில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15க்கு முடியும் முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 4591 பறக்கும் படைகள் முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் உட்பட தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். பள்ளிகளுக்கும் இதில் உடன்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் . 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!