10 ம் வகுப்பு மாணவன் அலையில் சிக்கி பலி! விடுமுறைக்கு சென்ற போது சோகம்!!

 
திவாகர்

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். டெம்போ ஓட்டுநரான இவருக்கு சித்ரா என்கிற மனைவியும், திவாகர் (15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது காணி மடம் பகுதியில் கண்ணன் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

கண்ணனின் மகன் திவாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை அடுத்து திவாகர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து நேற்று வீட்டில் இருந்து திவாகர் தனது தாயார் சித்ரா மற்றும் சகோதரி உடன் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். 

திவாகர்

அவர்கள் அங்கு கடல் அலையை ரசித்து கொண்டு இருந்த போது திவாகர் கடலில் இறங்கி கால் நனைத்துள்ளார். அப்போது அங்கு வந்த ராட்சத அலை அவரை இழுத்துச்சென்றது. தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து இது குறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கும், கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் திவாகர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திவாகரை அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது. 

கன்னியாகுமரி

இதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த திவாகரின் உறவினர்கள் அவர் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையில் போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web