10வது போதும்... ரூ.58,500 சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

 
தமிழக அரசு உதவித்தொகை கடன் திட்டம் ரூபாய் ரொக்கம் லோன்

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட வாரியாகக் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பதிவறை எழுத்தர் பணிக்கு மாதம் ரூ. 15,900 முதல் ரூ. 58,500 வரையிலான சம்பளத்தில் நீலகிரி, சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

இந்த காலி பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் கூடுதல் சலுகையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 55 வயது வரையிலும் தளர்வுகள் அரசு விதிகளின்படி வழங்கப்பட்டுள்ளன.

இப்பணிக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் கிடையாது. பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் மட்டுமே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரசு ஊழியர்கள்

இது முற்றிலும் ஆஃப்லைன் முறையிலான விண்ணப்பமாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் (உதாரணமாக, nilgiris.nic.in, sivaganga.nic.in) விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஊரக வளர்ச்சிப் பிரிவுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்டங்களைப் பொறுத்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.