பள்ளி விடுதியில் கொடூரம் ...10ம் வகுப்பு மாணவனை தாக்கிய சக மாணவர்கள் !

 
telangana

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மல்கஜ்கிரி மாவட்டம் தம்மைகடு பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் அபிஷேக் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். கமரெட்டி பகுதியைச் சேர்ந்த அபிஷேக் அப்பள்ளியின் விடுதியில் தங்கித் தனது கல்விப் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த போது அவனுடன் தங்கியிருந்த பன்னிரண்டு மாணவர்கள் சேர்ந்து அவனைச் சரமாரியாகத் தாக்கினர். இந்த வெறித்தனமான தாக்குதலில் அபிஷேக்கின் முகம் மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவன் மிகுந்த அவதிக்குள்ளானான்.

உடனே சுதாரித்துக் கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் காயமடைந்த மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் அவனது பெற்றோருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். அப்போது மாணவன் பள்ளி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாகப் பெற்றோரிடம் பொய்யான தகவலைக் கூறி அவர்கள் உண்மையை மறைக்க முயன்றனர். இதைக் கேட்டுப் பதறிப்போய் மருத்துவமனைக்கு விரைந்து வந்த பெற்றோர் தங்களது மகனிடம் என்ன நடந்தது என்று விவரமாகக் கேட்டறிந்துள்ளனர்.

Telangana Class 10 Student Beaten With Sticks, Bats By Seniors In Hostel Room

அப்பொழுது சக மாணவர்கள் பன்னிரண்டு பேரும் சேர்ந்து தன்னைத் தாக்கியதாக அபிஷேக் உண்மையை வெளிப்படுத்தியதால் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த பெற்றோர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்