கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
கோவை சூலூர் பாலியல் கோவை சூலூர் பாலியல்

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள முக்கியப் குற்றவாளிகள் இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி, கோவை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த வாரம் 10 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனிப்படைகள் அமைத்துப் போலீசார் தேடி வந்த நிலையில், அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை சூலூர் பாலியல்

குற்றவாளிகள் இருவருக்கும் இக்கொலைச் சம்பவத்தில் உள்ள முழுப் பின்னணி என்ன, இதற்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா, மற்றும் குற்றச் சம்பவத்திற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், இருவரையும் 5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

காவல்துறையினரின் இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் போக்சோ நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி அதிரடி உத்தரவைப் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை சிறுமி உடல் தகனம்

இச்சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளையும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப் போலீசார் தரப்பில் விரிவான முதற்கட்ட அறிக்கை மற்றும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.