இந்த வழித்தடங்களில் இன்றும், நாளையும் 11 எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம்!

 
ரயில்

இன்றும், நாளையும் வெளியூர் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், உங்கள் பயண வழித்தடத்தில் இந்த மாறுதல் வருகிறதா என செக் பண்ணிக்கோங்க. இன்று ஏப்ரல் 2ம் தேதியும், நாளையும் சென்னையில் முக்கிய வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த 11 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்

இது குறித்து ரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கொரக்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

நாளை சென்னை சென்ட்ரல் வரவேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் -பெங்களூரு இடையே இயக்கப்படும் அதிவேக ரயில் ஆவடி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை சென்ட்ரல் வர வேண்டிய ஆலப்புழா விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web