விக்கிரவாண்டி அருகே அரசு பேருந்து விபத்து: 11 பயணிகள் படுகாயம்!

 
பேருந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் அரசு விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 பயணிகள் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்பகுதியின் வழியாகச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

விபத்து

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்த பயணிகளை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்ததாலும், விபத்துக்குள்ளான பேருந்து நடுரோட்டில் நின்றதாலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பின்னர் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுப் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.