உத்தரப் பிரதேசம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 11 பேர் பலி - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

 
பட்டாசு ஆலை வெடிவிபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

கவுசாம்பி மாவட்டம் பிப்ரி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜேசிபி வெடிவிபத்து  உபி

இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்டு பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலத் துணை முதல்வர் கே.பி. மவுரியா நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பட்டாசு வெடிவிபத்து

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், இந்த கோர விபட்டுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.