தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!
தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் ட்ராம்ப்ஸ்பர்க் பகுதிக்கு வடக்கே சுமார் 24 கி.மீ தொலைவில், ஈடன்பர்க் செல்லும் வழியில் உள்ள என்1 நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சுமார் 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனச் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் துறை செய்தித் தொடர்பாளர் மோண்ட்லி மவாம்பி தெரிவித்துள்ளார். கவிழ்ந்த வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகள் மற்றும் பயணிகளைத் தீவிரமாகப் போராடி மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த கோர விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
