ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு; 6 பேர் மாயம் - மீட்பு பணிகள் தீவிரம்!

 
ரஷ்யா பனிச்சரிவு

ரஷ்யாவில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் வட காகசஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற மிஷிர்ஹி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொத்தம் 33 மலையேற்ற வீரர்கள் ஏறி மலையேற்றப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு திடீரெனப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் லடாக் பனிச்சரிவு

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் 6 பேரைத் தொடர்ந்து காணவில்லை; அவர்கள் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக எஞ்சிய 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா பனிச்சரிவு

காணாமல் போன அந்த 6 பேரைக் கண்டுபிடிக்கும் தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் 50 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். பனிச்சரிவு காரணமாக அப்பகுதியில் தொடர் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.