11 பேரை சுற்றி வளைத்து தட்டித் தூக்கிய காவல்துறை.. ரவுடிகளைக் களையெடுக்கும் பணியில் போலீசார்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடிதடி , கொலை, சூதாட்டம், கட்டப்பஞ்சாயத்து என ஈடுபட்டு வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிவார பகுதியில் மணி மற்றும் பால நிறுவுரை ரவுடி கும்பல் அறிவாளால் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விடுத்த உத்தரவுப்படி பழனி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.தனஞ்ஜெயன் அவர்களின் மேற்பார்வையில் பழனி வட்ட காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான தனிப்படையினர் சூதாட்டம், கொலை முயற்சி, அடிதடி, சாட்சிகளை மிரட்டல் செய்த குற்றங்களுக்காக போக்கிரி பூபாலகிருஷ்ணன், கோபிநாத் துர்கா மற்றும் அவரது கூட்டாளிகள் கல்துறை மணிகண்டன், விஷ்னுவரதன், தினேஸ்குமார், கனிஅரசன், Sport கார்த்தி, நாகேந்தர பிரசாத், பாலகிருஷ்ணன், குமார், ஜெனிவா கார்த்தி உட்பட 11 பேரை கைது செய்து 4 வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி பூபாலகிருஷ்ணனன்,கோபிநாத் துர்கா உடன் வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகளை தனிப்படையினர் தேடி வருகினறனர். பிடிபட்ட ரவுடிகளில் இருவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கே முயன்ற போது கீழே விழுந்து கால் உறிவு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடு மாவு கட்டு போடப்பட்டுள்ளனர். பழனி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!