இந்திய விமானப்படைக்கு 114 ரபேல் விமானங்கள் - விமானப்படை தளபதி தகவல்!
இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் மாபெரும் திட்டத்திற்கான ஒப்பந்தம் நடப்பு நிதியாண்டிற்குள் இறுதி செய்யப்படலாம் என விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படைக்காக 114 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் இந்த நீண்டகால திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்தது.

தற்போது விமானங்களின் விலை மற்றும் இதர முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பிரான்ஸ் நாட்டுடன் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கூறினார். அனைத்து விஷயங்களும் திட்டமிட்டபடி நடந்தால் நடப்பு நிதியாண்டிலேயே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படையின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 35 முதல் 40 போர் விமானங்கள் வரை தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
