காங்கோவில் படகு கவிழ்ந்து கோர விபத்து; 12 பேர் பலியான துயரம் - மீட்புப் பணிகள் தீவிரம்!
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்அள கிவு ஏரியில் நிகழ்ந்த படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்படியான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததையடுத்து, மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள பிவினா நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் போசா நோக்கிச் சென்ற படகு ஒன்று, கிவு ஏரியின் கிஷ்கி கிராமம் அருகே திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில் நீரில் மூழ்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில், உடனடியாகச் செயல்பட்ட மீட்புக் குழுவினர் 15 பயணிகளை உயிருடன் மீட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், நீரில் மூழ்கி மாயமான எஞ்சிய பயணிகளைக் கண்டறியும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏரிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இயக்கப்படும் படகுகளால் இதுபோன்ற விபடுகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
