ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் உட்பட 12 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஷ்கார் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் உட்பட நக்சலைட்கள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்காரின் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் நேற்றிரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.இன்று அதிகாலை வரை நீடித்து வந்த துப்பாக்கி சண்டையில் என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!