மே 6ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... பள்ளிக் கல்வித்துறை!

 
தேர்வு முடிவுகள்

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை நடைபெற்று முடிந்துள்ளன.  இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 7,951 பள்ளி மாணவர்கள், 1,009 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,960 பேர் தேர்வெழுத வரவில்லை என தமிழ்நாட்டு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. .இதில் உயிரியல் பாடத் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.  

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

இதுகுறித்து  ,‘‘இந்த வினாத்தாளில் தாவரவியல் பகுதி வினாக்கள் எளிதாகவும்,  விலங்கியல் பகுதியில் 1, 2, 3 மற்றும் 5 மதிப்பெண்  பிரிவுகளிலும் எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டன. சில கேள்விகள் பாடப் பகுதியின் உள்ளிருந்தும் கேட்கப்பட்டன.  இதனால் இந்தாண்டு 100க்கு 100  பெறுபவர்கள் எண்ணிக்கை குறையும்’’  . இதனையடுத்து தேர்வு முடிவுகள் குறித்து தேர்வுகள் இயக்குநரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6ல் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தேர்வு தாள்கள் திருத்தும் பணி
2023ல் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வரை பங்கேற்கவில்லை. இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் கொரோனா காரணமாக  பள்ளிக்கு முறையாக வராத மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் தரப்பட்டதால்  ஆப்சென்ட் எண்ணிக்கை உயர்ந்துவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்திருந்தது. இனி வரும் ஆண்டுகளில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் நடப்பாண்டு பொதுத் தேர்வு எழுத 7,72,200 பள்ளி மாணவர்கள், 21,875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94,075 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தமிழகம் முழுவதும் சுமார் 13000  மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனக்  கூறப்படுகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web