12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... மத்திய அரசில் 731 காலிப்பணியிடங்கள்!

 
மத்திய அரசு வேலை மத்திய அரசு வேலை

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு, குறிப்பாக 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பைப் பணியாளர் தேர்வாணையம் (SSC) வழங்கியுள்ளது. பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள குரூப் ‘சி’ (Group C) மற்றும் குரூப் ‘டி’ (Group D) பிரிவில் காலியாக உள்ள 731 சுருக்கெழுத்தர் (Stenographer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12-ம் வகுப்பு (HSC) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குரூப் ‘சி’ பணிக்கு: 18 முதல் 30 வயது வரை. குரூப் ‘டி’ பணிக்கு: 18 முதல் 27 வயது வரை. (அரசு விதிகளின்படி ஓபிசி, எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு). தேர்வானது இரண்டு முக்கியக் கட்டங்களாக நடைபெறும்.

மத்திய அரசு

கணினி வழித் தேர்வில், பொது அறிவு, பகுத்தறிவு மற்றும் ஆங்கில அறிவு ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

கணினி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்குச் சுருக்கெழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் கொடுக்கப்படும் வாசகங்களைச் சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு, மீண்டும் அதைச் சரியான வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையதளம்: https://ssc.gov.in/

கடைசித் தேதி: மே 15, 2026. விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 (பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது).

வேலைவாய்ப்பு

பணியின் பெயர்

காலிப்பணியிடங்கள்

ஸ்டெனோகிராபர் கிரேடு 'சி'

124

ஸ்டெனோகிராபர் கிரேடு 'டி'

607

மொத்தம்

731

4. காலிப்பணியிடங்கள் விவரம்

இந்தத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்போதிலிருந்தே சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு பயிற்சிகளை மேற்கொள்வது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும். மத்திய அரசின் நிரந்தரப் பணி மற்றும் நல்ல ஊதியம் என்பதால் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.