இளைஞரின் வயிற்றில் 13 ஹேர்பின், 4 சேப்டிபின், 6 பிளேடு!!அதிர்ச்சி!!

 
சேப்டி பின் பிளேடு

புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கையில் கிடைத்ததை எல்லாம் வாயில் போட்டுக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவருக்கு வயது 20. இவர் கடந்த சில நாட்களாக மிக கடுமையான வயிற்றுவலியால் கடும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இளைஞரின் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின், 4 சேஃப்டி பின், 6 பிளேடுகளை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.   மனநலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் இவற்றை விழுங்கியிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை இல்லாமல், சவாலான இந்த சிகிச்சையை எண்டோஸ்கோபி மூலம் மேற்கொண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து மருத்துவர்கள் விடுத்த செய்திக்குறிப்பில்  “ஜெம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல் நிபுணர்கள் கே.சசிகுமார் மற்றும் கே.சுகுமாரன் மற்றும் மருத்துவ இரைப்பை குடல் மருத்துவர் ஜி.ராஜேஷ் குமார் கொண்ட மருத்துவ வல்லுனர் குழு வெற்றிகரமான எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை மேற்கொண்டது.  

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி  புதுவை

இளைஞர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 7ம் தேதி மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார். நோயாளி மனநோய்க்கான மருந்துகளை உட்கொண்டிருந்தார். அல்சருக்கான சோதனைகள் மற்றும் ஸ்கேன் அறிக்கைகள் செய்யப்பட்டன. இதில் வயிற்றில் ஒரு கடினமான பொருளாக மாறிய பல கூர்மையான  பொருட்கள் குவிந்து கிடப்பதைக் கண்டறிந்தனர் .  நோயாளியின் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின்கள், ஐந்து சேப்டி பின் மற்றும் ஐந்து பிளேடு ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.  நோயாளி குணமான நிலையில் அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்”. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web