தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 
ஐபிஎஸ் பணியிட மாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் நிர்வாக நலன் கருதி அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளில் பணியாற்றி வந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

K. ஜோஷி நிர்மல் குமார் IPS: சேலம் மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த இவர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

A.G. பாபு IPS: சென்னை பெருநகர காவல் தலைமையிட கூடுதல் ஆணையராக இருந்த இவர், சேலம் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

Dr. சந்தோஷ் ஹாதிமானி IPS: சேலம் சரக டிஐஜியாக பணியாற்றிய இவர், சென்னை பெருநகர உளவுப் பிரிவு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

N. தேவராணி IPS: லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநராக இருந்த இவர், சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆலோசனை சட்டம் ஒழுங்கு

V. பத்ரி நாராயணன் IPS: கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாகப் பணியாற்றிய இவர், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

A.C. கார்த்திகேயன்: கட்டாய காத்திருப்புப் பட்டியலில் இருந்த இவர், சென்னை சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

N. மதிவாணன்: சென்னை NIB CID எஸ்பியாக இருந்த இவர், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

V.R. ஸ்ரீனிவாசன் IPS: பரங்கிமலை துணை ஆணையராகப் பணியாற்றிய இவர், NIB CID எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

K. ஸ்டாலின்: சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியாக இருந்த இவர், சிபிசிஐடி தென் மண்டல எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

P. சுந்தரவடிவேல் IPS: சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றிய இவர், சென்னை நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

Dr. V. பாஸ்கரன் IPS: வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த இவர், சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கித் சிங் IPS: சேலம் வடக்கு துணை ஆணையராகப் பணியாற்றிய இவர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

Dr. R. ஸ்டாலின் IPS: கட்டாய காத்திருப்புப் பட்டியலில் இருந்த இவர், பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.