130 கடைகளுக்கு சீல்!! மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!!

 
சீல்

சென்னை பாரிமுனை அருகே ரத்தன் பஜார் மற்றும் பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது.இங்குள்ள ஒரு சில கடைகள் மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதையத்து, நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சீல்

வாடகை பணம் செலுத்தாததால் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை. இதையடுத்து, நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த 130 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பூட்டி சீல் வைத்தனர்.

பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்!

வாடகையை வரைவோலையாக சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர். மாநகராட்சி அதிகாரிகள் திடீரென வந்து கடைகளை பூட்டி சீல் வைத்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web