வேலூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,361 மதுபாட்டில்கள் பறிமுதல்!

 
டாஸ்மாக் பீர் மது பாட்டில் பதுக்கி டாஸ்மாக் பீர் மது பாட்டில் பதுக்கி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,361 மதுபாட்டில்களைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பேரணாம்பட்டு அடுத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

பணம் ரொக்கம் சோதனை பறிமுதல்

இதனைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள வேளாங்கண்ணி என்பவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையைச் சேர்ந்த மொத்தம் 1,361 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த வேளாங்கண்ணியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீர் டாஸ்மாக்

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இவை பதுக்கப்பட்டதா அல்லது அண்டை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.