13,700 கிலோ பட்டாசுகள் பறிமுதல்! நகர் முழுவதும் சோதனை! டெல்லி போலீசார் அதிரடி!

 
பட்டாசு தீபாவளி

டெல்லி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில், 13,700 கிலோ பட்டாசுகளை அம்மாநில அரசு, தடையை மீறி பதுக்கி வைத்திருப்பதாக சொல்லி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தலைநகர் டெல்லியில், ஒவ்வொரு வருடமும் பாதி நாட்களில் மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக இந்த வருட தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் டெல்லியில் அதிக மாசு காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி வியாபாரிகள் பதுக்கி வைத்திருந்த சுமார் 13,700 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பட்டாசு தீபாவளி

டெல்லி நகரில் காற்றின் மாசு அதிகரித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பட்டாசு விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ஒரே நாளில் குவிந்த பட்டாசு குப்பைகள் இத்தனை டன்களா?!

இந்நிலையில் தடையை மீறி சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைக்கும் ரகசிய தகவலின்படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த அக்டோபர் 1 முதல் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 13,700 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web