தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 14 பேருக்கு பிப்ரவரி 19 வரை நீதிமன்ற காவல்... !

 
இலங்கை நீதிமன்றம்


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறையில் அடைத்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில்  ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே வழக்கம் போல் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். அத்துடன்  அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர். 

தமிழக  மீனவர்கள்  வேதனை


இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும்  பிப்ரவரி 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க  கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவினை அடுத்து  14 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!