துக்க நிகழ்வில் சோகம்... சுவர் இடிந்து விழுந்து 14 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!

 
மருத்துவமனை

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரோசாபாத் நகரில் அமைந்துள்ளது கமல்பூர் ராகாவ்லி  கிராமம்.  இந்த கிராமத்தில் பிரசவத்தில் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ள பலர் அவரின் வீட்டுக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்து  16 முதல் 17 பெண்கள் வரை அடியில் சிக்கிக்கொண்டனர்.

ஆம்புலன்ஸ்
இந்நிலையில் விபத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்  14 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். அத்துடன் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.